கலைத்தாயின் பொருளாளன் : அமரர் திரு. தபேந்திரன் குகதாசன்

Posted by: admin Category: News Comments: 0

கலைத்தாயின் பொருளாளன் : அமரர் திரு. தபேந்திரன் குகதாசன்

 

கலைத்தாயின் பொருளாளன்
தமிழ்ச்சங்கத்தின் அகமானவர்
தவேந்திரன் தனித்துவமானவர்
தனக்கான நேரம் எல்லாம்
தமிழ்ச் சங்கத்திற்கு தந்தவர்
பொறுப்பான பொருளாளர்
பொறுமையின் சிறப்பாளர்
பொன்னான வார்த்தைகளை
அவர் பூப்போல பேசுவார்
சொல்லுக்கும் செயலுக்கும்
இடைவெளியே இருக்காது
இவர் இடத்தை இட்டு நிரப்ப
இனி எவராலும் முடியாது
அல்லும் பகலும் உழைப்பார்
அவரை அலுப்பும் நெருங்காது
அலைபேசி அதிர்ந்தாலும்
ஆனந்தமாய் பதிலிடுவார்
அற்புதமான மனிதர் அவர்
உன்னதமான கணிதர் அவர்
மென்மையான மனமுடையார்
மெல்லிசையின் குணமுடையார்
கொஞ்சம் தான் பேசுவார்
ஆழமாய் எதோ யோசிப்பார்
நல்லதையே செய்திடுவார்
நால்வரையும் கவர்ந்திடுவார்
கடமையில் கண்ணாயிருப்பார்
கற்கண்டாய் இனித்திடுவார்
கோடை மழை கொட்டி விழும்
குளிர் பனியும் கூவி அழும்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின்
வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்
ஈரைந்து ஆண்டுகள் நேரத்தை
நேர்மையாய் விதைத்தவர்
முன்னாளில் தலைவரானார்
முனைப்புடனே பணிகள் புரிந்தார்
தாளாது சங்கம் தழைத்தோங்க
தடைகளையும் தகர்த்து எறிந்தார்
முடிசூடா மன்னன் போல
முகம் மலரும் புகழுடையார்
முன் வினைகள் பின் வினைகள்
முத்திநெறி என்றும் முயல்விப்பார்
 
-வசீகரன்

Share this post