நோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடமும், ஒலிப்பதிவுக்கூடமும் முற்பதிவு செய்ய
Welcome to Norway Tamil Sangam
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளம் வரவேற்கிறது
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்திற்கு வருகைதரும் உங்களுக்கு எமது மனம் கனிந்த நன்றிகள். நோர்வே தமிழ்ச்சங்கமானது 1979ம் ஆண்டுதொடக்கம் நோர்வேவாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையினை வழங்கிவரும் சமூக நிறுவனமாகும்.
எமது சங்கமானது பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் சனநாயகமுறையில், நோர்வே நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும். இவ்வருடத்து தமிழ்ச்சங்க நிர்வாகத்தினை தலைவர் ஸ்ரீ நவரட்ணம் அவர்களும், பிரதித் தலைவர் நடராசா ஆறுமுகம் அவர்களும் தலைமைதாங்கி நடாத்திவருகிறார்கள். Learn More »
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள்
வரவிருக்கும் கலாச்சார நிகழ்வு
நோர்வே தமிழ் சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழா – 2023
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 29.01.2023 அன்று Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
காலம்: 29-01-2023
நேரம்: 16:00 மணி
இடம் : Lørenskog hus, Festplassen 1, 1473 Lørenskog
நிகழ்வுகள்
-
-
- நடனங்கள்
-
- கர்நாடக இசைக் கச்சேரி (தென்னிந்தியக் கலைஞர்கள்)
-
- தாள வாத்தியக் கதம்பம் (Fusion) (ஈழத்து, தென்னிந்திய மற்றும் நோர்வேக் கலைஞர்கள்)
-
- மெல்லிசை மாலை (நோர்வே கலைஞர்களுடன், சுப்பர் சிங்கர் கலைஞர்கள்)
-
- நர்த்தன காவியா கலைக்கூட மாணவிகளின் நடனம்
-
- இந்திய இசைக் கலைஞர்கள் சகுந்தலா, மதன், ஹரிகரன் அவர்களின் கர்நாடக இசைமாலை.
- சூப்பர் சிங்கர் புகழ் ஹரிகரசுதன் மற்றும் இலங்கை சாரங்கா குழுவினர் புகழ் பானுதீபன், சுவர்னதீபன் அவர்களுடன் உள்ளூர்க் கலைஞர்களும் இணைந்த FUSJON இசை நிகழ்வு.
-
நுழைவுச் சீட்டு
அனுமதி இலவசம்
மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com
எதிர்வரும் விளையாட்டு நிகழ்வு
Stovner Games 2022
For Ticket Booking
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 44வது தைப்பொங்கல் விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்.
தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.
கடந்த நிகழ்வுகளின் கண்ணோட்டம்
Grasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்
எதிர்வரும் நிகழ்வு
எவ்வாறு அங்கத்தவராவது?
கீழ் உள்ள இணைப்பில் நீங்கள் உங்களது பெயர், விலாசம், தொலைபேசி, மின்னஞ்சல், பிறந்த்திகதி அகியவற்றை பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய சாந்தாப்பணத்திற்குரிய fakturaவும் அதற்குரிய KID இலக்கமும் தொலைபேசிக்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்கப்படும். நீங்கள் அந்த fakturaவை அதற்குரிய KID இலக்கத்தினை பாவித்துக் கட்டுமிடத்து உங்களின் அங்கத்துவம் ஏற்றுக்கொள்ளப்படும். KID இலக்கத்துடன் வரும் தொகையினை மட்டுமே நீங்கள் செலுத்தவேண்டும் அதற்கு அதிகமாகவே, குறைவாகவோ செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எமது சங்கத்தின் நடப்பாண்டு வருடம் 01.01 – 31.12 வரையாகும். அதாவது நீங்கள் ஒருவருடத்திற்கான சந்தாப்பணத்தை 01.12 அன்று செலுத்தினால் உங்கள் அங்கத்துவம் 31.12 வரை செல்லுபடியாகும். மீளவும் நீங்கள் புதிய வருடத்திற்குரிய சந்தாப்பணத்தை செலுத்தியதும் உங்கள் அங்கத்துவம் செல்லுபடியாகும்.
நோர்வே வாழ் இளையோர்களின் பாடற்திறமைகள் எனக்கு பலத்த ஆச்சர்யத்தைத் தருகின்றன. சிறியதொரு தமிழ்ச்சமுதாயம் வாழும் இடத்தில் இத்தனை திறமையுடையவர்கள் இருப்பதற்கு இங்கு நடைபெறும் பயிற்சிவகுப்புக்கள், நிகழ்ச்சிகள், பட்டறைகள் ஆகியன முக்கிய காரணமாக இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன். இப்படியாவற்றை ஒருங்கிணைத்து ஒழுங்குசெய்யும் நோர்வெ தமிழ்ச்சங்கத்தினை பாராட்டாது இருக்கமுடியாது.
தென்னியந்திய தமிழ் பின்னணிப்பாடரான என்னை நோர்வேக்கு அழைத்து தமிழ்ச்சங்கத்தின் 39வது சித்திரைவிழாவின் இசைநிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவும், திறமைமிக்க இந்நாட்டு தமிழ்க் குழந்தைகள் மற்றும் பாடகர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து செயற்படும் அரிய வாய்ப்பினைத் தந்த நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தாயக்கக் கலைஞர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களை புலம்பெயர்தேசத்து கலைநிகழ்வுகளில் பங்குகொள்ள அரிய வாய்ப்பினை வழங்கிய நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
சாரங்கா சகோதரர்களாகிய பாணு (Octopad) மற்றும் சாணு (Keyboard) ஆகிய எம்மை நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39வது சித்திரைவிழாவின் இசைநிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைத்த நோர்வே தமிழ்ச் சங்கத்தினருக்கும் அங்கத்தவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.