Projects - 39வது சித்திரைப் புத்தாண்டு விழா 2018

39வது சித்திரைப் புத்தாண்டு விழா 2018


Project Description

39வது சித்திரைப் புத்தாண்டு விழா

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட சித்திரை விழா 21.04.2018 அன்று Ullensaker kulturhus (Jessheim) மண்டபத்தில் 450க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அண்மையில் மறைந்த நாடக்கலைஞர் திரு. ராகவன் செல்லையா அவர்களை நினைவுகொண்டு கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி. …. அவர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் நினைவுப்பட்டயம் வழங்கிக் கௌரவித்தார். Dans for Ever, கலாசாதனா, Royal motion ஆகிய நடனக்குழுக்களின் நடனங்களுடன், facebook/Youtube பிரபல நகைச்சுவையாளர்களான Daniel Yogathas மற்றும் அவரது தாயர், துணைவியார் ஆகியோரின் AngryMum நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடைபெற்ற இசைவிருந்து நிகழ்வில் தாயகத்தில் இருந்து TMS ரகுநாதன், சாரங்கா பிரதர்ஸ் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் பாணு, சாணு ஆகிய சுரத்தட்டுக்கலைஞகளுடன் நோர்வே வாழ் எம்மவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். ஈழத்தமிழர்களின் முக்கிய இசைக்கலைஞராக மறைந்த பொப்பிசைப்பாடகரான திரு. ஏ. ஈ. மனோகரன் அவர்கள் இசைநிகழ்வின்போது நினைவுகூரப்பட்டு அவரது பாடல்கள் பாடப்பட்டன.

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39வது சித்திரை விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.

EVENT NAME:

சித்திரைப் புத்தாண்டு விழா 2019

EVENT LOCATION:

Ullensaker Kulturhus (Jessheim)

EVENT DATE:

21-04-2018

EVENT TIME:

17:00

EVENT TICKET:

ikke medlemmer: 100 kr (voksen og barn)
For medlemmer: 50 kr (voksen og Barn)

சித்திரைப் புத்தாண்டு விழா 2018 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

சித்திரைப் புத்தாண்டு விழா 2018 புகைப்பட தொகுப்பு