Projects - 39 ஆவது ஆண்டுவிழா 2018

39 ஆவது ஆண்டுவிழா 2018


Project Description

39 ஆவது ஆண்டுவிழா 2018

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் எமது ஆண்டுவிழாவினைக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட ஆண்டு விழா 27.10.2018 அன்று Lillestrøm kultursenter மண்டபத்தில் 600க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நோர்வேயின் பிரபல நாடகக்கலைஞர்களின் தயாரிப்பில் உருவாக நகைச்சுவைநாடகமான “Facebook மாப்பிள்ளை” நாடகம் மேடையேறவுள்ளதுடன், சிவாஞ்சலிநரதனாலயா வினது நடனமும், “நீயா நானா” தொலைக்காட்சிப்புகழ் கோபிநாத் அவர்களின் விவாத அரங்கும், தென்னிந்தியப்பாடகர்களான திரு. முகேஸ், சுர்முகி, லண்டன் வாழ் ஈழத்துப்பாடகரான கஜன், மற்றும் நோர்வோழ் தமிழ்ப்பாடகர்களும் இணைந்து நடாத்தும் இசை நிகழ்வும் நடைபெறவுள்ளது. இலங்கையில் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற “கண்டிக் கலவரம்” நூலின் எழுத்தாளரும் நோர்வேயில் வாழ்பவருமான சரவணன் கோமதி நடராசா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறும்.

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39 வது ஆண்டு விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.
பதிவுகளுக்கு

EVENT NAME:

39 ஆவது ஆண்டுவிழா 2018

EVENT LOCATION:

Lillestrøm Kultursenter
Kirkegata 11, 2000 Lillestrøm, Norway

EVENT DATE:

27-10-2018

EVENT TIME:

05:00 PM to 11:00 PM

EVENT TICKET:

For medlemmer: 150 kr
ikke medlemmer: 250 kr

39 ஆவது ஆண்டுவிழா 2018 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

39 ஆவது ஆண்டுவிழா 2018 புகைப்பட தொகுப்பு