2019 Sports

பட்மின்டன்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் விளையாட்டுகழகம் தற்போது வாரத்தில் 3 நாட்கள் பட்மின்டன் பயிற்சிவகுப்புகளை நடாத்திவருகிறது. இந்நேரங்களில் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சியளிப்பார். எமது தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்கள் மட்டுமே எமது பட்மின்டன் கழகத்தில் அங்கத்தவர்களாக இருக்கமுடியும். தவிர பட்மின்டன் விளையாடுபவர்கள் நோர்வே நாட்டு பட்மின்டன் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொள்வதும் வருடத்திற்கு ஆகக் குறைந்தது 4 புள்ளிகளை எமது கழகத்திற்குப் பெற்றுத்தரவேண்டும். (ஒரு போட்டியில் கலந்துகொண்டால் ஆக்க் குறைந்தது ஒரு புள்ளிகிடைக்கும். வெற்றிபெற்றால் 3 புள்ளிகள் கிடைக்கும்)

Osloவில் விளையாட்டுமைதானங்களை பெற்றுக்கொள்வதென்றால் நாம் பட்மின்டன் சம்மேளனத்தின் போட்டிகளில் கலந்துகொள்வது அவசியம் என எமக்கு அறிவுத்துப்பட்டுள்ளது. நாம் குறிப்பிட்ட அளவு புள்ளிகளை பெற்றுக்கொள்ளாவிடின் அடுத்த 6 வது மாதத்தில் எமக்கு கிடைக்கவிருக்கும் விளையாட்டு மண்டப நேரங்கள் குறைக்கப்படும். அல்லது மண்டபம் கிடைக்காதுபோகலாம்.

பட்மின்டன் போட்டிகளுக்கு தங்களின் பெயர்களை பதிந்தவர்கள் அப்போட்டிகளில் பங்குகொள்ளமுடியாது எனின் புதிய போட்டியாளர்களை பெற்றுத்தருவது அவரது கடமையாகும்.