நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பட்மின்டன் பயிற்சிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன

Posted by: admin Category: News, Sports Tags: Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பட்மின்டன் பயிற்சிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பட்மின்டன் பயிற்சிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன

இப்பயிற்சிகள் Rommen இல் உள்ள புத்தம் புதிய Nordbyhallen உள்ளரங்க மைதானத்தில் பிரதி செவ்வாய் (19:00 – 22:30), வியாழன் (16:00 – 19:30) மற்றும் வெள்ளி (நேரம் விரைவில் அறிவிக்கப்படும்) ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

Norges Badminton Forbundஆல் பயிற்சியளிக்கப்பட்ட பயிற்சியாளர் வியாழக்கிழமைகளில் பயிற்சியளிப்பார்.

எமது பட்மின்டன் விளையாட்டுப்பிரிவானது Norges Badminton Forbund இல் பதிவுசெய்யப்பட்டு இந்நாட்டு பட்மின்டன் கழகங்களுடன் இணைந்து செயற்படுவதோடு இந்நாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கிறது என்பதையும் அறியத்தருகிறோம்.

இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிறப்பாக விளையாடும் இளையோருக்கு சிறப்பான பயிற்சிகள் வழிகாட்டல்களை Norges Badminton Forbund வழங்கிவருகிறது.

எமது பட்மின்டன் கழகத்தில் தமிழர்கள் தவிர்ந்த வேறுநாட்டவர்களும் பங்குகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்மின்டன் விளையாட்டுக்கான நிபந்தனைகள்

  • தமிழ்ச்சங்கத்தில் அங்கத்தவராக இருக்கவேண்டும்.
  • மாதாந்தக் கட்டணம் 90 குறோணர்கள் செலுத்தவேண்டும் (10 மாதங்களுக்கு).
  • இத்தொகையானது இறகுப்பந்து, காப்புறுதி, Seriekamp avgift, பயிற்சியாளர் கட்டணம், உள்ளரங்க மைதானச்செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

தொடர்புகளுக்கு: சுகிர்தா பஞ்சலிங்கம் 99568120

https://www.facebook.com/norwaytamilsangam/videos/3110740282299367/

Share this post