நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள்

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள்

வணக்கம்,
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விபரங்களை இணைத்துள்ளோம்.
இம்முறை விளையாட்டுப் போட்டியானது எதிர்வரும் 17.08.2019, சனிக்கிழமை மட்டுமே நடைபெறும். அன்றைய தினம் Romerike friidrettsstadion இல் 09:00 – 18:00 மணி வரை இப்போட்டிகள் இடம்பெறும்.
அனைத்துப் போட்டியாளர்களுக்கும் நான்கு விளையாட்டுக்கள் வழங்கப்படும், அதில் மூன்றினை அவர்கள் தெரிவுசெய்யலாம்.
நாம் ஒரு நாளில் எமது விளையாட்டுப்போட்டியை நடாத்துவதால் எமது வழமையான சில விளையாட்டுகளைத் தவிர்த்து வெவ்வேறு வகைப்படுத்தலுக்குள்ளான சில விளையாட்டுக்களைத் தெரிவுசெய்துள்ளோம்.
போட்டியாளர்கள் தமது திறமைகளை/தகமைகளை இங்கு நோர்வேயில் மெய்வல்லுநர் போட்டிகளிலீடுபடும் ஏனையவர்களுடன் ஒப்பிட்டறியும் வாய்ப்பினை வழங்குவதற்காக போட்டிகளில் பங்கேற்றவர்களின் முடிவுகள் அனைத்தும் சகல விபரங்களுடனும் நோர்வே தமிழ்ச் சங்க இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
போட்டிகள் யாவும் நேர அட்டவணைப்படி நடைபெறும். தமது போட்டியாளர்களைத் தகுந்த நேரத்திற்குள் போட்டிகள் ஆரம்பிக்கும் இடங்களுக்கு அனுப்பிவைப்பது கழகங்களின் பொறுப்பாகும்
எம்மவர் மத்தியில் வாழும், விளையாட்டுத்துறைசார்ந்து உயர்நிலையில் ஈடுபட்டும் எம்மவருக்கு முன்மாதிரியாகத் திகழக்கூடியவர்களுமான இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களை எமது விளையாட்டுப் போட்டிக்கு அதிதிகளாக அழைக்க விரும்புகின்றோம். தாங்களறிந்த இதற்குத் தகுதியானவர்களின் விபரங்களை எமக்குப் பரிந்துரைக்குமாறு கழகங்களை வேண்டுகின்றோம்.
விண்ணப்பமுடிவுத்திகதி 23.06.2019
பதிவுகளை தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளம் மூலமாக மேற்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு 90992261
(19:00 – 21:00 மணி வரை) என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.
நன்றி
இவ்வண்ணம்,
விளையாட்டுப்பொறுப்பாளர்
நோர்வே தமிழ்ச் சங்கம்
Hilsen/Regards
Tamil Sangam i Norge
Stovner vel,
Fjellstuveien 26, 0982 Oslo, Norway.

Share this post