உரையாடல் (Dilani Johnsen Collin) அனைத்து தமிழ் நிறுவனங்களையும் ஆர்வலர்களையும் இவ்வுரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
வணக்கம்!
Dilani Johnsen Collin மற்றும் அவரது பெற்றோர், 2009ம் ஆண்டு நோர்வேக்கு வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அவர்களது அகதி விண்ணப்பம் நான்குதடவைகள் நோர்வே அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 5 வருடங்களாக Finsness என்னும் கிராமத்திலுள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுடைய அகதி விண்ணப்பக் கோரிக்கை நியாயமானது, அவர்களது சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை என்பதை முன்னாள் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் ஏரிக் சூல்கைம் அவர்களும் தெரிவித்துள்ளார்.
புதிதாகக் கிடைத்துள்ள தகவல்களை நோர்வே அரசு பரிசீலிக்கவேண்டும் என்று ஏரிக் சூல்கைம், கிறீஸ்தவக்குருமார், பல அரசியல்வாதிகள் மற்றும் பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதை வலியுறுத்தி எதிர்வரும் 08.02 அன்று நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் ஒரு அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து Dilani Johnsen Collin மற்றும் அவரது பெற்றோருக்கு எமது ஆதரவை தெரிவிக்க அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம்.
இதுபற்றியதொரு உரையாடல் தமிழ்ச்சங்கத்தில் 05.02.2020 புதன்கிழமை மாலை 19.00 மணிக்கு தமிழ்ச்சங்கத்தின் அலுவலகத்தில் (Fjellstuveien 26, 0982 Oslo) நடைபெறவுள்ளது. அனைத்து தமிழ் நிறுவனங்களையும் ஆர்வலர்களையும் இவ்வுரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்
Norway Tamil Sangam
Støttegruppa for familien Johnsen Collin