மேலதிக வெள்ள அனர்த்த உதவிகள் தேவைப்படுகின்றன.

மேலதிக வெள்ள அனர்த்த உதவிகள் தேவைப்படுகின்றன.

வணக்கம்!

நோர்வே தமிழ்ச் சங்கமும், அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் வழங்கிய வெள்ள நிவாரண நிதியின் முதற்கட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இதுவரையில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40.000 குறோணர்களும் நிவாரண உதவிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், அங்குள்ள நிவாரணத்தேவைகள் அதிகரித்தவண்ணமிருப்பதால் அனைவரையும் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து இந் நிவாரண நடவடிக்கைகளில் பங்குகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

உங்களது பங்களிப்பினை 545593 என்னும் Vips இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளலாம். இது 6 இலக்கங்களைக் கொண்ட இலக்கம் மட்டுமே. Vips இல் Kjøp og betal என்னும் பகுதிக்குள் சென்று இந்த இலக்கத்தினை எழுதுமிடத்து Prosjekt – Tamil Sangam i Norge தோன்றும். அங்கு உங்கள் பங்களிப்பினைச் செய்யலாம்.

எமது அனைத்து நடவடிக்கைகளைப்போன்றும் இந்தத் திட்டத்திற்குரிய அனைத்து வரவு செலவுகளும் வெளிப்படையாகப் பேணப்படும்.

உங்களது நண்பர்களுக்கும் இச்செய்தியினை பகிர்ந்தவ முடியுமா?

தங்களின் பங்களிப்பிற்கு எமது நன்றியினைத் தெரிவிக்கிறோம்.

ஒற்றுமையே எமது பலம்.

நன்றி

நோர்வே தமிழ்ச் சங்கம்
நிர்வாகம் 2018/2019

Share this post