நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான அரையாண்டுப் பொதுக்கூட்டம் – 15/11/2026

Posted by: admin Category: News, அறிவித்தல் Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான அரையாண்டுப் பொதுக்கூட்டம் – 15/11/2026

வணக்கம்!

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான அரையாண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 15/11/2026 ஞாயிற்றுக் கிழமை Verdenshuset, Haugenstua (Kiwiக்கு அருகில்) என்னும் விலாசத்தில் 18:30 மணிக்கு நடைபெறும். அங்கத்தவர்களை இக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இக்கூட்டத்தில் உரையாடப்பட வேண்டிய விடயங்கள் இருப்பின் அவற்றினைத் தமிழ்ச் சங்கத்தின் மின்னஞ்சலுக்கு (tamilsangam.norge@gmail.com) 05.11.2026க்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்:

  1. அகவணக்கம்
  2. கூட்ட நடத்துனரைத் தெரிவு செய்தல் – Valg av møteleder.
  3. கூட்ட அறிக்கை எழுதுனரைத் தெரிவு செய்தல் (தமிழ் – நோர்வேஜியன்) – Valg av referent (referat på tamilsk og norsk).
  4. கூட்ட அறிக்கையில் கையெழுத்திடுவதற்கு இருவரைத் தெரிவுசெய்தல் – Valg av to personer for å signere protokoll.
  5. பொதுக்கூட்ட அழைப்பை ஏற்றுக்கொள்ளல் – Godkjenning av innkalling.
  6. சென்ற கூட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளல் . Godkjenning av referat
  7. சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள்
  8. கணக்கறிக்கை
  9. ஏனைய விடயங்கள்

நன்றி,
நிர்வாகம்
நோர்வே தமிழ்ச்சங்கம்

Share this post