கண்காட்சிபற்றிய தகவல்கள்

Posted by: admin Category: News, அறிவித்தல் Comments: 0

கண்காட்சிபற்றிய தகவல்கள்

கண்காட்சிக்குரிய புகைப்படங்கள், ஓவியங்கள், நூல்கள், கைவினைப்பொருட்கள் என்பன 17.06.2023 அன்று 15.00 மணிக்கு முன்னதாக Rommen Scene மண்டபத்தில் தமிழ்ச்சங்க நிர்வாக உறுப்பினர் ஹரி (41253237) அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். புகைப்படங்கள், ஓவியங்கள் என்பன A3 அளவில் அல்லது அதற்கு குறைந்த அளவுகளில் இருத்தல் நன்று.

புகைப்படங்கள், ஓவியங்கள் Rommen Scene மண்டபத்திலுள்ள கண்காட்சிக்கான பிரத்தியேகமான சுவர் ஒன்றில் (uten rammer) காட்சிப்படுத்தப்படும். புகைப்படங்களை நாம் குண்டூசிபோன்ற பொருளின் உதவியோடு சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது என்பதை அறியத்தருகிறோம். நீங்கள் இதனை விரும்பவில்லை என்றால் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை ramme உடன் காட்சிப்படுத்தலாம். ஆனால், அவை மேற்கூறப்பட்ட சுவற்றிற்கு அருகே உள்ள மேசையில் காட்சிப்படுத்தப்படும்.

நூல்களை விற்பனைசெய்ய விரும்புபவர்கள் விற்பனைக்கான விலையையும் VIPPS இலக்கத்தினையும் A4 தாளில் குறிப்பிட்டு எம்மிடம் ஒப்படைக்கவேண்டும்.

நிகழ்வு முடிவுற்றதும் புகைப்படங்களையும் ஓவியங்களையும், நூல்களையும், கைவினைப்பொருட்களையும் நீங்கள் பெற்றுச்செல்லவேண்டும். இவற்றை பாதுகாத்து வைக்கும் வசதிகள் எம்மிடம் இல்லை என்பதையும் கவனத்திற்கொள்ளவும்.
கண்காட்சிக்கு ஏதேனும் உதவி தேவையெனில் 16.07 ஆம் திகதிக்கு முன்னதாகவே அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச்சங்கம்

Share this post