நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வெளியரங்க கால்பந்தாட்டப் போட்டிகள்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வெளியரங்க கால்பந்தாட்டப் போட்டிகள்

வணக்கம்!

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு வெளியரங்க கால்பந்தாட்டப் போட்டிகள் ஆவணிமாதம் 24ம் 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

சனிக்கிழமை 24.08.2019 அன்று பின்வரும் வயதுகளுக்கான போட்டிகள் நடைபெறும்.
ஆண்கள்: U7, U11, U15, overage, overage 50
ஞாயிற்றுக்கிழமை 25.08.2019 அன்று பின்வரும் வயதுகளுக்கான போட்டிகள் நடைபெறும்.
ஆண்கள்: U9, U13, U17, Over 40
பெண்கள்: Under 13, over 13
விண்ணப்பங்களுக்கு:
காலை 8 :30 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்படும் என்பதால் அனைத்து கழகங்களையும் ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிற்றுண்டிச்சாலையில் காலை, மதியம், இரவு நேரங்களில் உரிய உணவு வகைகளும் கொத்துரொட்டி, புரியாணி , ரோல்ஸ் போன்ற உணவு வகைகளும் விற்பனைக்கு உண்டு என்பதையும் அறியத் தருகிறோம்.

இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச்சங்கம்

நிர்வாகம் 2019

Share this post