நோர்வே தமிழ்ச் சங்கத்தின், காலத்தின் தேவை கருதிய கட்டாயத்தில் இன்று…

Posted by: admin Category: News, Sports Comments: 0

நோர்வே தமிழ்ச் சங்கத்தின், காலத்தின் தேவை கருதிய கட்டாயத்தில் இன்று…

நோர்வே தமிழ்ச் சங்கம், தனது 43 வருடச் சேவையையும் செயற்திட்டங்கள் செயற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த 2022 ஆம் ஆண்டில் முக்கிய திருப்புமுனையாக, விளையாட்டு துறைசார் நடவடிக்கைகளுக்காக தனது நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை செயற்படுத்துவதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

இதன்காரணமாக, விளையாட்டுத்துறைக்கு மானியம் பெறப்படவேண்டுமானால் Norges idrettsforbund இனால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய நாம் எமது நிறுவனக் கட்டமைப்பினை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.

அதேவேளை Tokerudhall என்னும் உள்ளரங்க மைதானத்தினை நிர்வாகிக்கும் பொறுப்பு எமக்கு கிடைப்பதற்கான பாரிய சந்தர்ப்பம் உண்டு.

மேற்கூறிய இரண்டு விடயங்களையும் Sangam idrettslag என்னும் நிறுவனத்தின் ஊடாகவே நாம் சாத்தியப்படுத்த முடியும்.
தமிழ்சங்கம் மற்றும் Sangam idrettslag ஆகிய நிறுவனங்கள் எவ்வாறு இணைந்து இயங்கும் என்பதை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமும் (samarbeidsavtale) தயாரிக்கப்படவேண்டும்.

மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு, இரண்டு நிறுவனங்களின் யாப்புகளுக்கு (Lov) இடையே குறிப்பிட்டளவு ஒற்றுமையான அம்சங்கள் இருத்தல் அவசியம்.

கடந்த அவசரப்பொதுக்கூட்டத்தில் இவை எடுத்துரைக்கப்பட்டு யாப்பில் செய்யவேண்டிய திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு அனுசரணைக் குழு தெரிவு செய்யப்பட்டது.

இக்குழுவினர் இரண்டு நோர்வேஜிய துறைசார் வல்லுனர்களுடன் இணைந்து யாப்பு திருத்த முன்மொழிவுகளை தயாரித்துள்ளனர். இத்திருத்தங்களை பொதுக்குழு ஆராய்ந்து அதற்குரிய தீர்மானங்களை எட்டப்படவேண்டும்.

தற்போதைய நிலையில், தமிழ்ச்சங்கத்தின் இணை நிறுவனமான Sangam idrettslag இற்கு உள்ளரங்க மைதானம் ஒன்றினை நிர்வகிக்கும் சநதர்ப்பம் கிடைத்தால் அதனால் எமது சமூகமும் எதிர்காலச் சந்ததியினரும் பல நன்மைகளைப் பெற முடியும் என நாம் கருதுகிறோம்.

எதிர்வரும் அவசரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களின் கருத்துக்களையும் வழிகாட்டலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share this post