40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்


40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்

40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 19.01.2019 அன்று Trondheimsvegen 362, 2016 Frogner என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

விழா நடைபெறும் மண்டபம் 250 இருக்கைகளை மட்டுமே கொண்டது.

கலைநிகழ்வுகளில் பங்குகொள்ளும் குழந்தைகளின் பெற்றோர் தங்களின் நுழைவுச்சீட்டுனை 09.01.2019 ஆம் திகதிக்கு முன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகளின்போது நாம் எமது அங்கத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குவது வழமை.

ஆனால், கலைநிகழ்வுகளில் பங்குகொள்ளும் குழந்தைகளின் பெற்றோரும், பங்குபற்றும் கலைஞர்களுக்கு இருக்கைகள் தேவையாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் தங்களை அங்கத்தவர்களாகப் பதிவுசெய்து 2019ஆம் ஆண்டுக்குரிய சந்தாப்பணத்தைச் செலுத்தி, கீழுள்ள இணைப்பின் ஊடாக அவர்களது இருக்கைகளைப் பதிவுசெய்து, உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றிலிருந்து இத்துடன் இணைத்திருக்கும் இணைப்பில் தங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

https://tamilsangam.yapsody.com/event/index/348406/40

Or

Ticket

* அனைத்து அங்கத்தவர்களுக்கும் 01.01.2019ம் திகதி அன்று medlemskontingent faktura அனுப்பப்பட்டது. அங்கத்துவப்பணத்தை செலுத்தியதும் மேற்குறிப்பிட்ட இணைப்பில் பதிவுசெய்யப்படும் ஒழுங்கில் இருக்கைகள் உறுதிசெய்யப்படும்.

medlemskontingent faktura கிடைக்காதிருப்பின் உங்களுடைய அங்கத்துவத்தினை பின்வரும் இணைப்பில் பதிவுசெய்யுமிடத்து உங்களுக்குரிய faktura அனுப்பிவைக்கப்படும்.

Member Register


09.01.2019ம் திகதிக்கு முன் நீங்கள் அங்கத்துவப்பணத்தை செலுத்தாவிட்டால் உங்களுடைய (நிகழ்வில் பங்குகொள்வோர்) முன்பதிவு நீக்கப்பட்டு, தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு அவ்விருக்கை வழங்கப்படும்.
எனவே, medlemskontingent fakturவினைச் செலுத்தி அங்கத்துவத்தினைப் புதுப்பித்துக்கொள்ளவும்.

Share this post