நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்

Posted by: admin Category: News Comments: 0

நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்

நோர்வே தமிழ் சங்க
அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்

வணக்கம்!!!

நோர்வே தமிழ் சங்கம் கோன்விட்-19 தொடர்பாய், சென்ற வாரம் உங்கள் அனைவரிடம் அவசர உதவி கோரியமை நினைவிருக்கலாம். ஆனால் எமக்கு “அவசர உதவி கோரல்” விண்ணப்பம் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், அங்கு நோய்த்தொற்று நிலைமை நீண்டு செல்வதாலும் ஊரடங்கு நீடிப்பின் காரணமாயும், எம்மால் சேகரிக்கப்பட்ட நிதி போதவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் உங்களிடம் இக் கோரிக்கையை மிகவும் தாழ்மையுடன் முன் வைக்கிறோம்.

உங்களிடமிருந்து, ஆகக் குறைந்தது kr.100,- எதிர்பார்க்கிறோம். இது அண்ணளவாய் 3 சிறிய குடும்பங்களுக்கு குறைந்தது 3-4 நாட்களுக்கு பசி தீர்க்கப் போதுமானது.

எம்மிடம் கோரப்பட்ட உதவிக்கோரிக்கையில், இம் முறை மலையகத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய, மிகவும் கடினமான பெருந்தோட்ட மலை வாழ்நிலைச் சூழ்நிலையாக கொண்டிருக்கும், பெருந்தோட்டதமிழ் அரசியலால் பிரதிநித்துவப்படாத காரணத்தினால் கவனிப்பின்றி வாழும் சுமார் 600 குடும்பங்களுக்கான உடனடி உணவு நிவாரணி நோக்கியதாகவிருந்தது. எனினும் இப்போதைய நிலையில் எம்மால் சுமார் 320-330 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கமுடிந்தது. கோரிக்கை மிகவும் வலுவாக உள்ளதால் மேற் கொண்டு நாம் உதவி செய்வதற்காய் உங்களிடம் மேலும் உதவியை எதிர்பார்க்கிறோம்.

எனவே உங்கள் பங்களிப்புக்களை மிகவிரைவில் எமக்கு தந்துதவுமாறு மிகவும் தாழ்மையுடனும் விநயத்துடனும் கேட்டுக்கொள்கிறோம்.

VIPPS: 565992 (Donation – Tamil Sangam i Norge)

Bank : 1503.92.23330 (Tamil Sangam i Norge)

நன்றி!!!

இவ்வண்ணம்

நிர்வாகம் 2020
நோர்வே தமிழ் சங்கம்.

Share this post