Posted by: admin
Comments: 0
Post Date: February 7, 2022
மெய்வல்லுனர் போட்டிகளை மென்பொருள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டினை நோர்வே தமிழ் சங்கம் மேற்கொண்டுவருகிறது.
இந்த மென்பொருளினைப் பரிசோதிக்கும் நோக்கில் 08.01.2022 அன்று யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக மைதானத்தில் நாட்டின் வடபகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மகிழ்தின மெய்வல்லுனர் போட்டி ஒன்று வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது.
இம் மென்பொருளினை உலகலாவிய ரீதியில் தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்காக IBC தொலைக்காட்சி நிறுவனத்தினர் தயாரித்திருந்த காணொளியினை இங்கு இணைத்துள்ளோம்.