அதிகாரபூர்வ அறிவிப்பு – நோர்வே தமிழ்ச்சங்கம் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான….

Posted by: admin Category: News, அறிவித்தல் Comments: 0

அதிகாரபூர்வ அறிவிப்பு – நோர்வே தமிழ்ச்சங்கம் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான….



அதிகாரபூர்வ அறிவிப்பு | நோர்வே தமிழ்ச்சங்கம்

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் வழங்கிய நிவாரண நிதிக்காக, இலங்கைத் தூதரகம் எங்கள் அலுவலகத்திற்கு வருகைதந்து நன்றி தெரிவித்தது. அந்த நன்றியைத் தமிழ்ச் சங்கம் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டது.

இந்த விடயத்தில் சமூகத்தில் பல்வேறுவிதமான கருத்துகளும் உணர்வுகளும் இருப்பதைத் தமிழ்ச் சங்கம் புரிந்துகொள்கிறது. குறிப்பாக, கடந்த கால அனுபவங்கள் பலரின் மனங்களில் இன்னும் வலியாக இருப்பதைச் சங்கம் மதிக்கிறது.

சங்கத்தின் செயல் மனிதாபிமான நோக்கத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அனர்த்தத்தில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே என்பதால், அவர்களுக்கு உதவுவது எம்மெல்லோரதும் கடமையாகச் சங்கம் கருதுகிறது.

இலங்கைத் தூதரகத்தின் நன்றியை ஏற்றுக்கொண்டது எந்தவிதமான அரசியல் ஆதரவு அல்லது நிலைப்பாட்டையும் குறிக்கவில்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான நடைமுறை மட்டுமே என்பதைச் சங்கம் வலியுறுத்த விரும்புகிறது.

எங்கள் சமூகத்தின் ஒற்றுமை, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை என்பன எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. உங்கள் ஆதரவும் புரிதலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

நன்றி
நோர்வே தமிழ்ச்சங்கம்

இத்துடன் அனர்த்த உதவிகளுக்குரிய பற்றுச்சீட்டுகளையும் ஆவணங்களையும் இணைத்திருக்கிறோம்.

பற்றுச்சீட்டுகளையும் ஆவணங்களையும் பார்வையிட – VIEW PDF

Share this post