30.08.2019 வெள்ளிக்கிழமை சந்திப்பில் பங்கு கொள்ளுமாறு நோர்வே தமிழ்ச் சங்கம் அன்புடன்அழைக்கிறது

30.08.2019 வெள்ளிக்கிழமை சந்திப்பில் பங்கு கொள்ளுமாறு நோர்வே தமிழ்ச் சங்கம் அன்புடன்அழைக்கிறது

வணக்கம்

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழா முத்தமிழ் விழாவாக சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அதன் ஓர் அம்சமாக, பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் ‘சக்தி பிறக்குது’ நாடகத்தை நோர்வே தமிழ்ச் சங்கம் தயாரித்து 27.10 அன்று மேடையேற்றவுள்ளது.

திரு. சர்வேந்திரா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள இம் மேடையேற்றம் குறித்த கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரத நடனம் முக்கிய இடம் பெறும் இந் நாடகத்தில் பங்கு கொள்ள விரும்பும் கலைஞர்களையும், மற்றும் இம் முயற்சிக்கு ஆலோசனைகளையும், உற்சாகத்தினையும் தர விரும்பும் கலைஆர்வலர்களையும் இச் சந்திப்பில் பங்கு கொள்ளுமாறு நோர்வே தமிழ்ச் சங்கம் அன்புடன்அழைக்கிறது.

பேராசிரியர் மௌனகுரு அவர்களும் நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40ம் ஆண்டு மாணிக்கவிழாவில் கலந்துகொள்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இடம் : Nordby Hallen (HSIL Turn) Idrettshus Norbyen, Rommen
Haavard Martinsens vei 30, 0978 Oslo
காலம்: 30.08.2019 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 18:00

மேலதிக தொடர்புகளுக்கு,

மாணிக்க விழா கலைக் குழு
40249494 / 91350469

Share this post