கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15,16.12.2018 அன்று நடாத்தப்பட விருக்கின்றது.

கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15,16.12.2018 அன்று நடாத்தப்பட விருக்கின்றது.

அனைத்து தமிழ்ப்பள்ளிகள், விளையாட்டுக்கழகங்கள், பொதுநிறுவனங்கள் முதலியவற்றிற்கு,

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15,16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது.

விரும்பிய சிறார்கள், மாணவர்கள் இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப
முடிவுத்திகதி 01.12.2018.

தங்கள் நிறுவனத்தினூடாக சிறார்கள், மாணவர்களுக்கு இப்போட்டிகள் பற்றிய விபரத்தை தெரியப்படுத்தும்படி நோர்வே தமிழ்ச்சங்கம் வேண்டிக்கொள்கின்றது.

போட்டிகள் சிறார்பிரிவில் இருந்து உயர்பிரிவுவரை 5 பிரிவுகளாக நடத்தப்படும்.

( ஓவியப்போட்டி 6 பிரிவுகளாக நடக்கும் )
கட்டுரை (தமிழ்), ஓவியம் -15.12.218
கட்டுரை (நோர்வேஜியன் மொழி), கவிதை (நோர்வேஜியன் மொழி)-16.12.2018

நன்றி

இப்போட்டிகளுக்காக எழுத்துருக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
tsangam40.eluthuru@gmail.com.

(எழுத்துருக்குழு சார்பாக)
இ.குணதாசன்
(92881966)

Share this post