நோர்வே தமிழ்ச் சங்கம், தனது 43 வருடச் சேவையையும் செயற்திட்டங்கள் செயற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த 2022 ஆம் ஆண்டில் முக்கிய திருப்புமுனையாக, விளையாட்டு துறைசார் நடவடிக்கைகளுக்காக தனது நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை செயற்படுத்துவதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
இதன்காரணமாக, விளையாட்டுத்துறைக்கு மானியம் பெறப்படவேண்டுமானால் Norges idrettsforbund இனால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைய நாம் எமது நிறுவனக் கட்டமைப்பினை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
அதேவேளை Tokerudhall என்னும் உள்ளரங்க மைதானத்தினை நிர்வாகிக்கும் பொறுப்பு எமக்கு கிடைப்பதற்கான பாரிய சந்தர்ப்பம் உண்டு.
மேற்கூறிய இரண்டு விடயங்களையும் Sangam idrettslag என்னும் நிறுவனத்தின் ஊடாகவே நாம் சாத்தியப்படுத்த முடியும்.
தமிழ்சங்கம் மற்றும் Sangam idrettslag ஆகிய நிறுவனங்கள் எவ்வாறு இணைந்து இயங்கும் என்பதை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமும் (samarbeidsavtale) தயாரிக்கப்படவேண்டும்.
மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு, இரண்டு நிறுவனங்களின் யாப்புகளுக்கு (Lov) இடையே குறிப்பிட்டளவு ஒற்றுமையான அம்சங்கள் இருத்தல் அவசியம்.
கடந்த அவசரப்பொதுக்கூட்டத்தில் இவை எடுத்துரைக்கப்பட்டு யாப்பில் செய்யவேண்டிய திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு அனுசரணைக் குழு தெரிவு செய்யப்பட்டது.
இக்குழுவினர் இரண்டு நோர்வேஜிய துறைசார் வல்லுனர்களுடன் இணைந்து யாப்பு திருத்த முன்மொழிவுகளை தயாரித்துள்ளனர். இத்திருத்தங்களை பொதுக்குழு ஆராய்ந்து அதற்குரிய தீர்மானங்களை எட்டப்படவேண்டும்.
தற்போதைய நிலையில், தமிழ்ச்சங்கத்தின் இணை நிறுவனமான Sangam idrettslag இற்கு உள்ளரங்க மைதானம் ஒன்றினை நிர்வகிக்கும் சநதர்ப்பம் கிடைத்தால் அதனால் எமது சமூகமும் எதிர்காலச் சந்ததியினரும் பல நன்மைகளைப் பெற முடியும் என நாம் கருதுகிறோம்.
எதிர்வரும் அவசரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களின் கருத்துக்களையும் வழிகாட்டலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆயுர்வேத மருத்துவக் கருத்தரங்கு.
காலம்: 19.06.2019, Kl. 19.30
இடம்: Fossum gård, Stovner.
கைதடி சித்த போதானா வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற அரச சித்த வைத்தியரும் மற்றும் லங்கா சித்த... read more
நோர்வே தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், மெய்வல்லுனர் போட்டிகளை இலகுவாக பதிவு செய்யும் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றினை பரிசோதிக்கும் நோக்கில் 08.01.2022 அன்று யாழ் மாநகரில் அரியாலை... read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46ஆவது ஆண்டிற்குரிய ஆண்டுவிழா 05.10.2025 அன்று Lørenskoghus, Festplassen 1,1473... read more
பின்வரும் இணையப் படிவத்தினைப் பூர்த்தி செய்து உங்கள் பரிந்துரையையும் அதற்கான காரணத்தையும் 25.09.2026 இற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
read more
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 44வது வருட ஆண்டுவிழா 21.10.2023 சனிக்கிழமை 17:00 மணிக்கு Rommen... read more
வணக்கம்!
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது.
உரையாடப்பட்டவை:
1. நோர்வே அரசுக்கு ஒரு கோரிக்கையை... read more
இவ்வருடம் தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டுவிழா என்பது அனைவரும் அறிந்ததே!
40ஆவது ஆண்டுமலருக்கு சரியான வரலாற்று தகவல்கள் வருவதுடன் வேறும் சில தேவைப்படுகிறது.
* 1979 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை நிகழ்ந்த... read more
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 2022ம் ஆண்டுக்குரிய இசை நிகழ்வுகளுக்கான பாடகர் தெரிவுக்குரிய விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
பாடகர் தெரிவு கரோகே முறையில் தெரிவுசெய்யப்படுவர்.
உங்களது பதிவுகளை எமது இணைத்தளத்தில் மேற்கொள்ளலாம்.... read more
நோர்வேத் தமிழ்ச்சங்கம் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் Skedsmohallen இல் நடைபெறவுள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
திகதி:... read more