Terms and Conditions TS Studio & Meeting Room Booking

சங்க அலுவலக (கூட்ட அறைகள் & இசைப்பயில் கூடங்கள்) நிர்வாகம் தவிர்ந்த வெளியாரிற்கான உத்தேச ஒழுங்குமுறைகளும், பாவனை விதிகளும்.


1. 28 வயதுக்குக் குறைந்த சங்க நடப்பு ஆண்டு அங்கத்தவர்கள் (இளையோர்), சங்க இணையத்தின்( www.norwaytamilsangam.com ) ஊடாக முன் பதிவு செய்து, இலவசமாக இசைப்பயில்கூடம் ( Musikk øvelse rommet) மற்றும் இசைத் தொழில்நுட்ப அறையினைப் (Lyd studio) பயன்படுத்தலாம். ஆனால் சங்க அலுவலகத்தின் Toilet தவிர்ந்த மற்றைய அறைகளையோ, சங்க அலுவலகத்தின் இசை சம்மந்தப்படாத உபகரணங்களையோ பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

2. சங்க அங்கத்துவம் இல்லாத நபர்களைக் கொண்ட சிறிய இசைக் குழுக்கள் / நபர்கள், அல்லது சங்க அங்கத்தவம் உள்ள / அல்லாத இசை ஆர்வமுள்ள 28 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் சங்க இசைக்கூடத்தினை பயன்படுத்துவதாயின் பின்வரும் கட்டணங்கள் அறவிடப்படும்.

திங்கள் – வெள்ளி 08.00 – 17.00 ( kr. 200) ஆகவும்,

திங்கள் – வெள்ளி 17.00 – 22.00 ( kr. 400) அல்லது மணித்தியாலத்துக்கு kr.100. ஆகவும்,

சனி – ஞாயிறு & பொதுவிடுமுறை நாட்களில் 08.00 – 22.00 ( kr 800) அல்லது மணித்தியாலத்திற்கு kr. 100. ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நேர முன் பதிவினை அடுத்து VIPPS 545593 ஊடாகப் பணம் செலுத்தப்படும் பட்சத்தில், சங்க அலுவலக நுழைவு / பாவனைக்கான அனுமதி வழங்கப்படும். ஆனால் சங்க அலுவலகத்தின் Toilet தவிர்ந்த மற்றைய அறைகளையோ, சங்க அலுவலகத்தின் இசை சம்மந்தப்படாத உபகரணங்களையோ பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

3. சங்க அலுவலக கூட்டஅறைகள், சங்க நிர்வாகம் அல்லது சங்கம் சம்மந்தனான உப குழுக்கள் தவிர்ந்த வேறு நபர்கள் / குழுக்களுக்கு, கூட்டம் சம்மந்தமான இரவல் பாவனைக்கு, முன்பதிவும் கீழ்வரும் கட்டணமும் செலுத்தப்பட்டதாயின் பாவனை அனுமதிக்கப்படும்.

திங்கள் – வெள்ளி 08.00 – 17.00 ( kr. 200)

திங்கள் – வெள்ளி 17.00 – 22.00 ( kr. 400) அல்லது மணித்தியாலத்துக்கு kr.100.

சனி – ஞாயிறு & பொதுவிடுமுறை நாட்களில் 08.00 – 22.00 ( kr 800) அல்லது மணித்தியாலத்திற்கு kr. 100.

பாவனைக்காக நேர முன் பதிவினை அடுத்து VIPPS 545593 ஊடாகப் சரியான கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில், சங்க அலுவலக நுழைவு / பாவனைக்கான அனுமதி வழங்கப்படும். ஆனால் சங்க அலுவலகத்தின் Toilet தவிர்ந்த மற்றைய அறைகளையோ, சங்க அலுவலகத்தின் இசை சம்மந்தப்படாத உபகரணங்களையோ பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

சங்க அலுவலகப் பாவனையின் போது உள்ள பொதுவிதிகள்:

1. பாவனையாளர்கள் தங்கள் வாகனங்களை சங்க அலுவலகத்துக்கு முன்புறமாகவும், சங்கஅலுவலக சுவரினை நோக்கியும் வாகனம் முன்புறம் உள்ளதாக தரிக்கப்படவேண்டும்.

2. பாவனையாளர் தவிர்ந்த மற்றவர்கள் சங்க அலுவலகத்தில் இருப்பது தவிர்க்கப்படவேண்டும்.

3. பாவனை ஆரம்பத்தின் போது, அலுவலகத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் குறித்து இருப்பின் அது குறித்து உடன் சங்க அலுவலகப் பொறுப்பாளருக்கு தெரிவிக்கப்படல் வேண்டும். அல்லது முறைப்பாட்டிற்குரிய படங்கள் எடுக்கப்பட்டு சங்க மின் அஞ்சலான post@norwaytamilsangam.com அல்லது WhatsApp 46 77 35 35 க்கோ உடனேயே அனுப்பப்படல் வேண்டும்.

4. பாவனை முடிந்து சங்க அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, அனைத்து மின் விளக்குகள் (Lights), மேலதிக வெப்பக்கருவிகள் (varmeovn) , திரைக்காட்சிக்கருவி (Prosjekter) என்பன அணைக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் கூட்ட மேசை, அறை மற்றும் Toilet என்பன பாவனைக்கு முன் இருந்த வகையில் இருந்தது போன்று விட்டுச் செல்ல வேண்டும். இறுதியாக கதவு பூட்டப்படும் போது, Alarm சரியாக போடப்படுள்ளதா என உறுதி செய்து, கதவும் முறையாக பூட்டப்பட்டுள்ளதாக உறுதி செய்து கொள்ளவேண்டும். இதன் போது ஏதேனும் சிக்கல் இருப்பின் உடனடியாக தொலைபேசி மூலம் (46773535) அறிவிக்கப்படல் வேண்டும்.

5. முன் பதிவின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட நேரக் கட்டணம் செலுத்தப்பட்ட நேரத்துக்கு மேலதிகமாக 15 நிமிடங்களின் பின்னர் சங்கத்தை விட்டு வெளிச்சென்றிருந்தால், அதைக்குரிய மேலதிக கட்டணமாக மணித்தியாலம் kr. 100 உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

6. Alarm இரவு 22.30 இக் பின்னர் முழு அளவில் பிரயோகத்துக்குள்ளாகும் என்பதால் எக்காரணத்தினாலும் இரவு 22.15 பின்னர் யாரும் சங்கத்தில், இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

7. தவறான / முறைகேடான பாவனை, சேதாரம் மற்றும் தவறான Alarm பாவனையினால் ஏற்படும் ( vekterutrykning ) மேலதிக செலவுகளுக்கு, சம்மந்தப்பட்ட இரவல் பாவனையாளர்களே பொறுப்பாவார்கள்.