வணக்கம்!
01/03/2026 அன்று நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நோர்வேத் தமிழ்ச்சங்கத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு நடைபெறவுள்ளது. புதிய நிர்வாகத்தில் இணைய விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை கீழுள்ள விண்ணப்பப்படிவத்தில் 25.01.2026 க்கு முன்னதாகப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தமிழ்ச்சங்கத்தன் நிர்வாகக்கூட்டங்கள், செயற்பாடுகள், கலைநிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இதுபோன்ற ஏனைய நிகழ்வுகளுக்கும் கணிசமான அளவு நேரம் ஒதுக்கப்படவேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும். அத்துடன் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான ஆளுமையும், அனுபவமும் நோர்வேஜியமொழி அறிவும் இருப்பது அவசியம் என தேர்தற்குழு கருதுகிறது.
விண்ணப்படிவம்: https://forms.gle/
இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் பதிலளிக்க முடியாது. மேலதிக விபரங்களுக்குத் தேர்தற்குழுவின் மின்னஞ்சலுடன் தொடர்புகொள்ளவும். sangamvalg@gmail.com
இவ்வண்ணம்
தேர்தற்குழு
