ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்--------'நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்'- மகாகவி ------ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்----'நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்'- மகாகவி----------ஒற்றுமையே பலம் அதுவே தமிழின் வளம்

NORWAY TAMIL SANGAM

தமிழரசர் மரபுகள்

E-mail Print PDF

   தமிழரசர் மரபுகள்

                           

1. பாண்டியர் : சரித்திரத்திற்கு உட்படாதவர்: கபாடபுரம் மூழ்கியபின், மண்வூரிலிருந் தாண்டகுலசேகர பாண்டியன் முதல் திருஞானசம்பந்தர் காலத்துக் கூன்பாண்டியன்வரை, 74 பாண்டியர் பெயர்கள் திருவிளையாடற் புராணத்திற் கூறப்படுகின்றன. கடைக்கழக முடிவின் பின் , களப்பிரார் என்ற வகுப்பார் பாண்டிநாட்டைச் சிறிதுகாலம் ஆண்டுவந்தனர்.

சரித்திரத்திற்கு உட்பட்டவர்.
 
முதல்மரபு
 
கடுங்கோன் (கி.பி 590 - 620), மாறவர்மன் (620 - 45) , சேந்தன் ( 645 - 70) , அரிகேசரி மாறவன்மன் ( 670 - 710 ) , கோச்சடையன் ( 710 - 40 ) , மாறவர்மன் ராஜசிம்மன் i ( 740 - 65 ) , ஜடில பராந்தக நெடுஞ்செழியன் ( 765 - 815 ) , ஸ்ரீ மாறன் ( 815 - 62 ) , வரகுணவர்மன் ( 862 - 80 ) , பராந்தக வாரராகவன் ( 880 - 900 ), மாறவர்மன் ராஜசிம்மன் ii ( 900 - 20 ) .கி.பி 925 முதல் 12 ஆம் நூற்றான்டுவரை பான்டிநாடு சோழர் வயப்பட்டிருந்தது.

இரண்டாம் மரபு

ஜடாவர்மன் குலசேகரன் ( 1190 - 1217 ), மறவர்மன் சுந்தரபாண்டியன் ( 1216- 38 ) , மறவர்மன் சுந்தரன் ( 1238 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1253 ) , மறவர்மன் குலசேகரன் ( 1268 ) , ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ( 1276 ) , மாறவன்மன் வைகிரம பாண்டியன் ( 1283 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1296 ) , ஜடவர்மன் சுந்தரபாண்டியன் ( 1330 ).

பின்பு, அலாவுடின், கம்பன்னவுடையார்,நாயக்க மன்னர், ஆர்க்காட்டு நவாபு, ஆங்கிலேயர் என்பவர் முறையே பாண்டி நாட்டைக் கைப்பற்றினர்.

சோழர்: (சரித்திரத்திற் குட்படாதவர் - முற்காலத்தவர்) :
சூரியன் , மனு , இக்குவாகு , ககுத்தன் , புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன், மாந்தாதா, முசுகுந்தன் , தேவர்க் கமுதமளித்தவன், வல்லபன், சிபி , சுராதிராசன் , சோளன், இராசசேகரி, பரகேசரி, காலனிடத்தில் வழக்குரைத்தோன், காந்தன், காகந்தி , அனைத்துலகும் வென்றோன், வேந்தனைக் கொடியாக வைத்தோன், ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன், தன் குருதியை உண்ணவளித்தோன், காற்றைப்பணிகொண்டோன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன், வானவூர்தி செலுத்தினோன், அரசர் சூளாமணி , வீரவாதித்தன் , சூரவாதித்தன் முதலியோர்

மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

சரித்திரத்திற்கு பிற்கலத்தவர் : உருவப் பஃறேர். இளஞ்சேட் சென்னி , கரிகாலன் , கிள்ளிவளவன் , தித்தன் , பெருங்கிள்ளி , நல்லுத்தரன் , கோப்பெருஞ் சோழன் , கோச்செங்கட் சோழன் முதலியோர்.

இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக்குட்பட்டிருந்தது.

சரித்திரத்திற் குட்பட்டோர்
விஜயாலயனும் முதலாம் ஆதித்தனும் (850 - 907), முதலாம் பராந்தகன் ( 907 ), இராஜாதித்தன் (947 ) , கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985 ), முதலாம் ராஜராஜன் (985 - 1014 ), ராஜேந்திர சோழதேவன் ( 1012 ), ராஜாதிராஜன் ( 1018 ), விஜயராஜேந்திரதேவன் (1052 ), ராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070 ), முதலாம் குலோதுங்கன் ( 1070 ), விக்கிரமச்சோழன் ( 1118 ), இரண்டாம் குலோதுங்கனும் இரண்டாம் இராஜராஜனும் இரண்டாம் ராஜாதிராஜனும் (1143 - 78 ), 3ஆம் குலோத்துங்கன் ( 1178), மூன்றாம் இராஜராஜன் ( 1216 ), மூன்றாம் இராஜேந்திரன் ( 1246 ).

இவருள்,
ராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிபடுத்தி ஈழம் (இலங்கை ), கடாரம் ( பர்மா ), முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்.மாறவர்மபாண்டியன் 1222 - லும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1267-லும் சோணாட்டைக் கொண்டனர். பின்பு முறையே, துலுக்கர், உடையார், நாயக்கர், மராட்டியர்,ஆங்கிலேயர் என்பவர் சோணாட்டைக்கைக்கொண்டனர்.

சேரர் :பாரதப்போரில் இருபடைகட்கும் சோறு வழங்கியவன் பெரிஞ்சோற்றுதியஞ் சேரலாதன்.

சேரர் , கரூர் , வஞ்சிகொடுங்கோலூர், முதலிய நகர்களை முறையே தலைநகராகக் கொண்டிருந்தனர்.கடைக்கழகமரபினர்உதியஞ்சேரல், இமையவருமன் நெடுஞ்சேரலாதன்,பல்யானைச்செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,செங்குட்டுவன், ஆடுகோட்பட்டுச் சேரலாதன், முதலியோர். செங்குட்டுவன் வடநாட்டின் மேற் படையெடுத்துச் சென்று ஆரியவரசரை வென்று , நாவலந்தேசம் முழுதும் தன்னடிப் படுத்தினான். மாந்தரம் பொறையன், கடுங்கோ , கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை, அந்துவஞ்சேர லிரும்பொறை, செல்வக் கடுஞ்கோ லிரும்பொறை, யானைக்கட்சேய் , மாந்தரஞ்சேர லிரும்பொறை, கணைக்கா லிரும்பொறை முதலியோர்.

கடைக்கழக காலத்தில் , தகடூரென்னும் தருமபுரியில், அதிகமான் நெடுமா அஞ்சி , அதியமான் பொகுட்டெழினி முதலிய அதிகர் மரபினர் ஆண்டுவந்தனர். 13ஆம் நூற்றாண்டிலும் அம்மரபைச்சேர்ந்த விடுகாதழிய பெருமாள்ளென்னும் சிற்றரசன் இருந்திருக்கின்றான்.

மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியல் 8ஆம் நூற்றாண்டில் குலசேகர ஆள்வாரும், 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் நாயநாரும் ஆண்டனர்.
மலைக்குகிழக்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியில் தென்பாகம் (கோயம்புத்தூர் வட்டம் ) கழககாலத்திலேயே கொங்கு நாடென பிரிந்துவிட்டது. பின்பு சில நூற்றாண்டுகளுக்குப்பின் வடபாகமும் (சேலம் வட்டம் ) கங்கபாடியென பிரிந்துவிட்டது. மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுத்தமிழர் 14ஆம் நூற்றாண்டில் மலையாளியராகத் திரிந்துவிட்டனர். மைசூர் நாடு 12ஆம் நூற்றாண்டுபோல் கன்னட நாடாக மாறிவிட்டது. தெலுங்கர் 8ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாட்டிற் குடியேறத்தொடங்கிவிட்டனர்.
Last Updated ( Saturday, 04 February 2012 00:22 )
 

அண்ணாதுரை

E-mail Print PDF

அறிஞர் அண்ணா

Read more...

Last Updated ( Saturday, 04 February 2012 00:20 )
 

காசி ஆனந்தனின் நறுக்குகள்

E-mail Print PDF

காசி ஆனந்தனின் நறுக்குகள்

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!,

Read more...
Last Updated ( Wednesday, 14 April 2010 07:48 )
   

வாழையடி வாழை

E-mail Print PDF

வாழையடி வாழை

புலத்தில் வாழும் குழந்தைகளின், இளையவர்களின் சாதனைகளைப் பற்றிப்பேசவேண்டும் பேசியாகவேண்டும். பிற மொழியில் படித்து அவர்கள் விரும்பும் கல்வியையோ துறையையோ தெரிவுசெய்தாலும் கூட நமது தாய் மொழியிலும் நிறைய படைப்புகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நமது மொழி, இசை, கலைகள் அழியாது பேணவேண்டும் என்று விருப்புக்கொண்டவர்கள். எந்த படைப்புகளாக இருந்தாலும் அந்தப்படைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டிய கடைமைப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அவர்கள் ஆக்கங்கள் பற்றிப்பேசுவதே ஊக்கம் கொடுப்பதற்கு நிகராகிறது. வாழையடி வாழையூடாக நோர்வேவாழ் நம் பிறங்கடைகளை அறிமுகப்படுத்துவதில் நோர்வே தமிழ்ச்சங்கம் பெருமைப்படுகிறது.
 

*அர்ச்சனா.ஆனந்தகரன்*

அர்ச்சனா. ஆனந்தகரன் நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்து வரும் சிறுமி. தனது ஐந்தாவது அகவையில் பாடல் போட்டியில் பாடி முதல் பரிசு பெற்றுக்கொண்டாள். தமிழ்க்கல்வி தேர்வுகளிலும் முதல் மாணவியாகத் திகழ்பவள். புலத்து தமிழ்க்குயிலாக சில பாடல்களை பாடியுள்ளாள். வெளியிட்ட முதல் ஒலிவட்டு ' புலத்திலிருந்து ஒரு தமிழ்க்குயில்' .இவ் ஒலிவட்டு வெளியீட்டின் போது தமிழீழத்தின் வெளியீட்டுகுழுவினரால்'சின்னக்குயில்' பட்டமும் கொடுக்கப்பட்டது.26 மார்கழி கடற்கோளினால் தமிழீழ மக்கள் இறப்பைக் கண்டும் கேட்டும் அச்சோக நிகழ்வை எண்ணி 'Mørke dager' (இருண்ட நாட்கள்) என்று ஓர் உரைநடையை நோர்வே நாட்டு மொழியில் எழுதி நோர்வே நாட்டு மக்களுக்கு தாம் தொப்புள்கொடி உறவை மறக்காமல் இருப்பதை அவ் உரைநடையில் உணர்தினாள். அவ் உரைநடைபரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

*ரூபன். சிவராஜா*

இலங்கையில் பிறந்து சிறுஅகவையிலே நோர்வேக்கு குடிபெயர்ந்த இவர் தமிழிலும் நோர்வேசிய மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். இவருடைய கட்டுரைகள் பல தாளிகைகளில் ( பத்திரைகையில் ) இடம் பெற்றுள்ளன. நோர்வேத்தழிழ் நாடகக்குழுவோடு சேர்ந்து சில நாடகங்களை எழுதியும் உள்ளார். அத்தோடு பல நாடகங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்தும் உள்ளார். சிறந்த பாடல்களை எழுத்தக்கூடிய பாடல் ஆசிரியராக மட்டும் அல்லாது தனித்தமிழுக்கும் உரமூட்டி வருகிறார் . இவர் இலக்கியப் பணி தொடர நாமும் வாழ்த்துகிறோம். இவர் எழுதிய பாடல் தொகுப்பு சுதந்திரவாசல் இறுவெட்டு வெளிவந்துவிட்டது.

*வசீகரன்.சிவலிங்கம்*

தமிழீழ தாயகத்தில் பிறந்து புலத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் மூத்த தலைமுறைப் படைப்பாளி இவர். முதன்முதல் வெளியிட்ட நூல் ' இன்ரநெற்றும் இருபதாம் நூற்றாண்டும் ' ஆகும். அதோடு பாடல்களையும் கவிதைகளையும் எழுத வல்லவர். இவருடைய கவிதைகள் தாளிகைகளில் இணையத்தளங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய காதல் பாடல்களின் தொகுப்புகளாய் வெளியிட்ட ' காதல் கடிதம்' ' காதல் மொழி ' உலக தமிழ் மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழக பாடலாசியர்களின் காதல் பாடல்களுக்கு இணையாக இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் வெளியிட்ட ஒலிவட்டுகளில் ஒன்றான 'காதல் கடிதம்' பாடல்களைக் கொண்டு 'காதல் கடிதம்' திரைக்காவியமாக திரையில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தனி முயற்சியால் தமிழக கலைஞர்களையும் இணைத்து படைப்புகளை செய்யும் இவரையும் தமிழாசான் வாழ்த்துகிறேன்.

 *கவிதா.இரவிக்குமார்*

சின்னஞ்சிறு அகவையில் இடம்பெயர்ந்து நோர்வேநாட்டில் குடியேறிய பின்பு நோர்வேயில் தமிழும் கற்று புது உரைநடை எழுதுவதில் வல்ல பெயர் சொல்லத்தக்க இளம் பெண் எழுத்தாளராகத் திகழ்பவர். குமுகத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதையும் அதிலிருந்து பெண்கள் எப்படித் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை உரைநடையே அவர் எழுத்தில் இடம்பெறும். அவர் வெளியிட்ட நூல்கள் கரைசேரும் கடிதங்கள், பனிப்படலத்தாமரை ஆகும். நல்ல பாடல்களையும் தருபவர் அவர். நடனத்தையும் கற்று பல புலத்து அவலத்தையும் அக்கலை ஊடாக வெளிப்படுத்தி வருபவர். அவர் எழுத்தும் கலையும் மேம்பட தமிழாசான் வாழ்த்துகிறேன்.

www.nortamil.com

உங்கள் சாதனைகளும் இடம்பெற வேண்டுமாயின் தொடர்பு கொள்ளுங்கள் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இணையப் பதிவர் ச.உதயன்.நிருவாகம் 2012

Read more...
Last Updated ( Wednesday, 18 January 2012 21:52 )
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 5

தமிழ் சங்கத்தின் செயற்பாடுகள்
 

Ulti Clocks content

You are here: